கோலாலம்பூர்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசியாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக தென் கொரிய அரசாங்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸி டம் தெரிவித்துள்ளனர். திரு நாம் பெரும்பாலும் வெளி நாடுகளிலேயே வசித்து வந்தார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அடையாளம் காணப்படாத வட கொரியர் ஒருவர் இறந்துபோன தாக மலேசிய போலிசார் தெரிவித்தனர். அந்த ஆடவரின் அடையாளம் உறுதிசெய்யப்படவில்லை என செபாங் மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் அஸிஸ் கூறினார்.
'வடகொரியத் தலைவரின் சகோதரர் மலேசியாவில் கொலை'
1 mins read

