கிம் ஜோங் நாம் கொலை: குறும்புச் செயல் எனக் கருதி ஈடுபட்டதாகக் கைதான பெண்கள் தகவல்

கிம் ஜோங் நாம் கொலை: குறும்புச் செயல் எனக் கருதி ஈடுபட்டதாகக் கைதான பெண்கள் தகவல்

1 mins read

கோலாலம்பூர்: வடகொரியத் தலை வரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்த தாக நம்பப்படும் இரண்டு பெண்கள் கடந்த மூன்று ஆண்டு களாக சீனாவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று மக்காவ்வுக்குப் புறப்பட கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்குத் திரு கிம் சென்று இருந்தபோது இந்தோனீசியக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 25 வயது சிட்டி ஆயிஷாவும் வியட்னா மியக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 29 வயது டோவான் தி ஹுவோங்கும் அவரது முகத்தில் விஷத் திரவம் தெளித்துத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படு கிறது.