பாகிஸ்தான் தர்காவில் தற்கொலைத் தாக்குதல்: குறைந்தது 75 பேர் மரணம்

பாகிஸ்தான் தர்காவில் தற்கொலைத் தாக்குதல்: குறைந்தது 75 பேர் மரணம்

1 mins read
025c0ec2-2976-49d1-ab5a-b0942266c881
-

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள ஒரு பிரபல தர்காவில் நேற்று முன்தினம் இரவு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 75 பேர் உடல் சிதறி இறந்தனர். மரணம் அடைந்தவர்களில் ஏறத்தாழ 30 பேர் குழந்தைகள் என்று பாகிஸ்தானிய ஊடகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியப்படுகிறது. மரண எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தாக்கு தலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

தர்காவில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி