மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க மலேசியாவிடம் வடகொரிய தூதரகம் கோரிக்கை

மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க மலேசியாவிடம் வடகொரிய தூதரகம் கோரிக்கை

1 mins read

கைது செய்யப்பட்ட வடகொரியத் தலைவரின் ஒன்று விட்ட அண்ணன் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ள மூன்று சந்தேக நபர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என மலேசியாவில் உள்ள வடகொரியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இச்சம்பவத்தில் வியட்நாமிய பெண், இந்தோனீசிய பெண், வடகொரிய ஆண் ஆகிய மூவரும் நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக அத்தூதரகம் நேற்று ஊடகங் களுக்கு வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியிடப் பட்ட பின்னர் நேற்று மாலை 4 மணியளவில் வடகொரியத் தூத ரகத்தைச் சேர்ந்த கார் ஒன்று மலேசிய தலைமை போலிஸ் அலுவலகத்துக்கு வந்ததை செய் தியாளர்கள் வியப்புடன் பார்த் தனர்.