பெய்ஜிங்: சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று திடீரென்று மூண்ட தீயில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனத் தகவல் தெரி வித்தது. நான்:சங் நகரில் உள்ள நான்கு மாடி ஆடம்பர நட்சத்திர ஹோட்டலின் இரண்டாவது மாடியில் தீ மூண்டதாகவும் தீ மளமளவென நாலா பக்கமும் பரவியதாகவும் கூறப்பட்டது. பாதுகாப்பு கருதி அருகில் உள்ள 24 மாடிக் கட்டடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக தகவல் கள் கூறின.
சீன ஆடம்பர ஹோட்டலில் தீ: 10 பேர் பலி
1 mins read

