பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து ஜனவரி 20ஆம் தேதி சவூதி அரேபியாவின் மதினா நகருக்குப் புறப்பட்ட பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறு வனத்தின் போயிங் 777 விமானத் தில் ஏழு பேர் நின்றுகொண்டே மூன்று மணி நேரம் பயணம் செய்து மதினாவில் போய் தரை இறங்கினார்கள். அந்த விமானத்தில் மொத்தம் 409 பேர்தான் பயணம் செய்ய முடியும். ஆனால் ஏழு பேர் கூடுத லாக ஏற்றப்பட்டனர். அந்த ஏழு பேருக்கும் கையா லேயே எழுதப்பட்ட அனுமதி அட் டைகள் கொடுக்கப்பட்டன என்று பாகிஸ்தானின் செல்வாக்குமிக்க 'டான்' செய்தித்தாள் தெரிவித்து உள்ளது. இதன் தொடர்பில் பாகிஸ்தான் விமான நிறுவனம் புலன்விசார ணையைத் தொடங்கியுள்ளது.
விமானத்தில் நின்றுகொண்டே பயணம்!
1 mins read

