கோலாலம்பூர்: மலேசியா சென்றுள்ள சவூதி அரேபிய மன்னருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சவூதி அரேபிய மன்னர் சல்மான் அப்துல்அஸிஸ் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ளார். கடந்த பத்தாண்டு களுக்கு மேற்பட்ட காலத்தில் மலேசியாவுக்கு வருகை அளித்துள்ள முதல் அரேபிய மன்னர் சல்மான் ஆவார். மன்னர் சல்மானை கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், தற்காப்பு அமைச்சர் ஹிசாமுதின் ஹுசேன் ஆகியோர் வரவேற்றனர். மன்ன ருடன் 600 பேர் அடங்கிய குழுவினரும் சென்றுள்ளனர்.
சவூதி அரேபிய மன்னருக்கு மலேசியாவில் சிறப்பு வரவேற்பு
1 mins read

