டிரம்ப் மூத்த ஆலோசகர் மீது சமூக ஊடகங்கள் சினம்

டிரம்ப் மூத்த ஆலோசகர் மீது சமூக ஊடகங்கள் சினம்

1 mins read
0bc916fd-81c3-42f9-ae01-cc700b9f2e70
-

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மூத்த ஆலோசகரான கெல்லியான் கன்வே சமூக ஊடகத் துறையினரின் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் திரு டிரம்ப், பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளின் கறுப்பினத் தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நேரத்தில் டிரம்ப்பின் ஆலோசகர் கெல்லியான் கன்வே அங்கிருந்த ஒரு சோஃபாவில் கால்களை மடக்கியபடி அமர்ந்தவாறு தொலைபேசியில் கவனம் செலுத்துவதைப் பார்த்த ஊடகத் துறையினர் அவர் மீது சினம் கொண்டனர். காலணியைக்கூட கழற்றாமல் சோஃபாவில் அவர் அமர்ந்திருந்த விதம் மரியாதை குறைவாக இருந்தது என்று ஊடகத் துறையினர் குறிப் பிட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப், ஆப்பிரிக்க அமெரிக்கத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது மூத்த ஆலோசகர் கெல்லியான் கன்வே அங்குள்ள சோஃபாவில் 'சொகுசாக' அமர்ந்திருக்கிறார். படம்: ஏஎஃப்பி

இன்றைய செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg