கோலாலம்பூர்: வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் ஏர் கொரிய விமான நிறுவன ஊழியர் கிம் உக் இல் என்பவரைக் கைது செய்ய மலேசிய போலிசார் ஆணை பிறப்பித்துள்ளனர். விசாரணைக்காக கிம் உக் தேடப்படுவதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். விசாரணையில் ஒத்துழைக்குமாறு கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தூதரக அதிகாரி ஒருவருக்கும் போலிசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
வடகொரிய விமான நிறுவன ஊழியருக்கு கைது ஆணை
1 mins read

