வடகொரிய சந்தேக நபரை விடுவித்தது மலேசியா

வடகொரிய சந்தேக நபரை விடுவித்தது மலேசியா

1 mins read
b23dbba6-4b8a-4681-a7ab-3162c3a94b3f
-

கோலாலம்பூர்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் மலேசி யாவில் கைது செய்யப்பட்ட வடகொரிய நாட்டவரை மலேசிய போலிசார் விடுவித்துள்ளனர். கைதான ரி ஜோங் சோல் மீது குற்றம் சாட்டுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ரி ஜோங் சோல், குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவர் வடகொரியாவுக்கு நாடு கடத்தப் படுவார் என்று அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்தது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கிம் ஜோங் நாம், கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது 'விஎக்ஸ்' எனும் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனப் பொருளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.2017-03-04 06:00:00 +0800

ரி ஜோங் சோல். படம்: ராய்ட்டர்ஸ்