வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பெண்களும் சிறுவர்களும் நுழைவதைத் தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து திரு டிரம்ப்பின் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. அந்த உத்தேச நடவடிக்கையின் கீழ் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்கும் பெண்களும் சிறுவர்களும் தனியாக பிரிக்கப்படுவர் என்றும் இதன் மூலம் பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பவிருப்பதாக திரு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பெண்கள் நுழைவதை தடுக்க யோசனை
1 mins read

