ஈராக்கில் மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் அங்குள்ள ஐஎஸ் போராளிகளை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். சண்டைக்குப் பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறு கின்றனர். மோசுல் நகரின் ஒரு சில பகுதிகள் ஈராக்கியப் படையினர் வசம் வந்தபோதிலும் அந்நகரின் மேற்குப் பகுதியில் கடும் சண்டை நீடிக்கிறது. மோசுல் நகரில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அறிகுறி தெரிவதாக அனைத் துலக செஞ்சிலுவைச் சங்கம் ஒன்று தெரிவித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்
மோசுல் நகரில் சண்டை; கண்ணீருடன் வெளியேறும் மக்கள்
1 mins read
-

