வடகொரியாவுக்கு மலேசியா விடுத்த எச்சரிக்கை

வடகொரியாவுக்கு மலேசியா விடுத்த எச்சரிக்கை

1 mins read
cc154213-8ef2-4f8f-aabe-707600b95d3c
-

கோத்தா கினபாலு: மலேசியாவுக் கான வடகொரிய தூதர் காங் சோலை வெளியேற்றும் உத்தரவு, கிம் ஜோங் நாம் கொலை வழக்கு விசாரணையில் வடகொரிய அரசு தலையிட வேண்டாம் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது என்று மலேசிய துணைப் பிரதமர் சாஹிட் ஹமிடி கூறினார். கடந்த சனிக்கிழமை மலேசியாவில் உள்ள வடகொரிய தூதர் காங் சோல் அடுத்த 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மலேசிய அரசு உத்தரவு பிறப்பித்தது. மலேசியா அரசுக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து விளக்கம் கேட்பதற்காக விஸ்மா புத்ராவுக்கு வரும்படி அவருக்கு வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுத்திருந்தது.

மலேசியாவில் உள்ள வடகொரிய தூதர் காங் சோல்