இலங்கை அதிபர்: பாதுகாப்புப் படையினர் மீது வழக்குத் தொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை

இலங்கை அதிபர்: பாதுகாப்புப் படையினர் மீது வழக்குத் தொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை

1 mins read

இலங்கையில் ராஜபக்சே அதிப ராக இருந்தபோது இடம்பெற்ற தாகக் கூறப்படும் போர் குற்றச் செயல்கள் பற்றி அனைத்துலக நீதிபகள் விசாரிக்க வேண்டும் என்று ஐநா உலக அமைப்பு மறுபடியும் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள வேண்டுகோளை இலங்கையின் இப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக நிராகரித்துவிட் டார். இலங்கை பாதுகாப்புப் படை யினருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரி வித்துவிட்டார். அனைத்துலக நெருக்குதல் எல்லாம் தம்மிடம் பலிக்காது என்று குறிப்பிட்ட அவர், ஐநா மனித உரிமை மன்றத்தின் கோரிக்கையை முற்றாக நிராகரித் தார்.