பாக்தாத்: ஈராக்கில் டிக்ரிஸ் ஆற்றின் பாலத்தை அரசாங்கப் படை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஐஎஸ் வசம் இருந்த மோசுல் நகரைக் கைபற்ற ஈராக்கியப் படை கடந்த அக்டோபர் மாதம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அந்நகரின் கிழக்குப் பகுதியை ஈராக்கியப் படை கடந்த ஜனவரி மாதம் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஐஎஸ் போராளிகளை அந்நகரிலிருந்து விரட்ட ஈராக்கியப் படை கடுமையாக சண்டையிட்டு வருகிறது.
பாலத்தைக் கைப்பற்றிய ஈராக்கியப் படை
1 mins read

