கோலாலம்பூர்: மலேசியாவில் சென்ற வாரம் கைது செய்யப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் நால்வர், சென்ற மாதம் சவூதி அரேபிய மன்னர் சல்மான் மலேசியா வந்திருந்தபோது அவரைத் தாக்க திட்டமிட்டிருந்த தாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் திடுக்கிடும் தகவலைத் தெரிவித் துள்ளார். மலேசியப் போலிசார் சென்ற வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேரைக் கைது செய்தனர். அவர்களில் நால்வர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
சவூதி மன்னரைத் தாக்க திட்டமிட்ட நால்வர் கைது
1 mins read

