வாஷிங்டன்: இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஜான் கெல்லி கூறினார். திரு டோனல்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பதவி ஏற்றது முதல் அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளில் பெரும்பாலானோரை வெளியேற்றப்போவதாக அறிவித்துள்ளார். அத்துடன் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லையில் சுவர் எழுப்பவிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். சுவர் எழுப்புவதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட மெக்சிகோ பணம் கொடுக்க வேண்டும் என்ற அவரது யோசனையை மெக்சிகோ நிராகரித்துவிட்டது.
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த கள்ளக்குடியேறிகள்
1 mins read

