காபூல் மருத்துவமனை தாக்குதலில் பலர் பலி

காபூல் மருத்துவமனை தாக்குதலில் பலர் பலி

1 mins read

காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள மிகப்பெரிய ராணுவ மருத்துவமனைக்குள் போராளிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 38 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராள மானோர் காயம் அடைந்ததாகவும் தற்காப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் எனப்படும் பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுக் கொண் டுள்ளது. அந்த மருத்துவ மனையின் ஊழியர்கள் போல சீருடை அணிந்து போராளிகள் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அதி காரிகள் கூறினர்.