கோலாலம்பூர்: வடகொரியாவில் சிக்கியிருக்கும் ஒன்பது மலேசியர் களை மீட்கும் அரசாங்கத்தின் முயற்சியில் மக்களின் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார். கிம் ஜோங் நாம் கொலை விவகாரத்தில் வடகொரியா உட னான பூசலுக்குத் தீர்வு காணும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு உள்ளது. இதில் மக்கள் ஒன்று பட்டு இருப்பது முக்கியம் என்றார் அவர். சென்ற செவ்வாய்க்கிழமை வடகொரியாவில் உள்ள மலே சியர்கள் வெளியேற அந்நாடு அதிரடியாக தடை விதித்தது. இதற்குப் பதிலடியாக மலேசி யாவும் வடகொரியர்கள் வெளி யேறத் தடை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான அரச தந்திர உறவு மேலும் மோசம் அடைந்தது.
பிரதமர் நஜிப்: மக்கள் ஒற்றுமை அவசியம்
1 mins read

