தென்கொரிய அதிபர் நீக்கம்

தென்கொரிய அதிபர் நீக்கம்

1 mins read
c7494a1c-fe9a-4c37-835c-76f7ddbb8441
-

சோல்: தென் கொரியாவின் அரசி யலமைப்பு நீதிமன்றம், அதிபர் பார்க் கியன் ஹையை, 65 பதவியி லிருந்து நீக்கியதால் பெரும் ஆர்ப் பாட்டம் வெடித்தது. காவல் துறையினருடன் பார்க் கின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். அதோடு ஆர்ப்பாட்டங் களில் பங்கேற்ற இருவர் மாண் டனர். தென் கொரியாவின் ஆகப் பெரிய நிறுவனங்களான சாம்சுங், லோட்டே ஆகியவற்றுடன் அதிபர் பார்க், ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அவரை பதவியி லிருந்து நீக்க ஒருமனதாக முடிவு செய்தனர். குறிப்பாக அவரது நெருங்கிய தோழியான சோய் சூன் சில்லுடன் தொடர்புடைய ஊழல் விவகாரத் தில் பார்க்கின் பதவி பறிபோனது. அதிபருக்கு உரிய தகுதிகளை இழந்துவிட்டதால் அவர் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப் படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

அதிபர் பதவியிலிருந்து பார்க் கியன் ஹை நீக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg