தோக்கியோ: ஜப்பானின் வாகயாமா பகுதியில் அமைக்கப்படும் 'அட்வென்சர் வோர்ல்ட்' எனும் விலங்கியல் தோட்டத்தில் இந்திய ரக யானை ஒன்றை தாய்லாந்தைச் சேர்ந்த விசய் மடீ தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். ஏதோ காரணத்தால் கோபமடைந்த அந்த யானை தும்பிக்கையைச் சுழற்றியது. யானையின் தும்பிக்கையில் சிக்கிய விசய்யைத் தூக்கி தரையிலும் கூண்டின் மீதும் அடித்ததில் அவர் பலத்த காயமுற்றார். தகவலறிந்த போலிசார் 37 வயது விசய்யை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் பின்னர் உயிரிழந்தார். பொதுமக்களுக்காகத் திறந்து விடப்படுவதற்கு முன்பே இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் விலங்கியல் தோட்டத்தில் பயிற்றுவிப்பாளரைக் கொன்ற யானை
1 mins read

