வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு, விருப்பங் களைத் தகர்க்கும் விதத்தில் இருப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்பின் புதிய பயணத் தடை பற்றி 130க்கும் மேற்பட்ட வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் சில நாடுகளைச் சேர்ந்தோர், அகதிகள் ஆகியோ ருக்கு பயணத்தடை விதித்துள் ளது டிரம்பின் புதிய திட்டம். 'இஸ்லாத்துடன் அமெரிக்கா போரிடுகிறது' என்பது போன்ற பொய்யான தகவல்களை இந்தத் திட்டம் உறுதிசெய்வதுபோல இருப்பதாக முன்னாள் அரசாங்க அதிகாரிகளும் நிபுணர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
டிரம்பின் புதிய பயணத் தடைக்கு 134 அமெரிக்க நிபுணர்கள் கண்டனம்
1 mins read

