தோக்கியோ: ஜப்பான் அதன் ஆகப் பெரிய போர்க்கப்பலை சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதிக்கு அனுப்பத் திட்டமிட்டுள் ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்தக் கடல் பகுதியில் மூன்று மாத கால சுற்றுலாப் பயணம் செல்ல வரும் மே மாதம் அக்கப்பலை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்த வட்டாரத்தில் ஜப்பானிய கடற்படையின் ஆகப் பெரிய ஒரு காட்சியாக இது அமையும். தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
தென்சீனக் கடலுக்கு ஆகப் பெரிய போர்க்கப்பலை அனுப்ப ஜப்பான் திட்டம்
1 mins read

