பாக்தாத்: ஈராக்கில் மோசுல் நகரின் பெரும் பகுதியை ஈராக் கியப் படையினர் கைப்பற்றியுள்ள வேளையில் அந்நகரில் எஞ்சி யிருக்கும் ஐஈஸ் போராளிகள் வெளியில் தப்பிச் செல்ல முடியாது என்பதால் அவர்கள் அங்கு கொல்லப்படுவார்கள் என்றும் ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை ஒருங் கிணைக்கும் அமெரிக்கத் தூதர் பிரப் மெக்கூர்க் எச்சரித்துள்ளார். மோசுல் நகரில் ஐஎஸ் போராளிகளைத் தோற்கடிப்பது மட்டுமல்ல, அவர்களைத் தப்ப விடக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்ப தாகவும் பிரட் மெக்கூர்க் தெரிவித்தார். ஐஎஸ் போராளிகளின் பிடியிலிருந்து மோசுல் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கடைசி சாலையையும் ஈராக்கியப் படையினர் துண்டித்துவிட்டதாக அவர் சொன்னார்.
போராளிகளுக்கு எதிராக அமெரிக்கத் தூதர் எச்சரிக்கை
1 mins read

