அடிஸ் அபாபா: ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 46 பேர் பலியானதாகவும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவின் புறநகர் பகுதியில் மிகப் பெரிய குப்பைக் கிடங்கு ஒன்று உள்ளது என்றும் அதற்கு அருகில் ஓர் ஆலை கட்டுமானத்துக்காக நிறைய குப்பைகள் குவிக்கப் பட்டிருந்ததாகவும் இந்நிலையில் சனிக்கிழமையன்று அந்தக் கிடங்கில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் சரிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: 46 பேர் மரணம், பலர் காயம்
1 mins read

