ஓரினக் காட்சிகளை நீக்க உத்தரவு

ஓரினக் காட்சிகளை நீக்க உத்தரவு

1 mins read
453641dd-3514-4cfb-a75d-fd275d4b2863
-

கோலாலம்பூர்: வால்ட் டிஸ்னியின் 'பியூட்டி அண்ட் த பீஸ்ட்' திரைப்படத்தில் வரும் ஓரினக் காட்சிகளை நீக்க மலேசிய தணிக்கை யாளர்கள் உத்தரவிட்டு உள்ளனர். கடந்த வாரம் ரஷ்யாவில் திரையிடப்பட்ட இந்தப் படத்துக்கு 'பெரியவர்களுக் கான திரைப்படம்' என்று சான்றிதழ் வழங்கப்பட்டதால் பிரச்சினை வெடித்தது. இந்தப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம், சில காட்சிகளை வெட்ட உத்தரவிட்டது.

பியூட்டி அண்ட் த பீஸ்ட் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. படம்: வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ