வடகொரியாவை சமாளிக்க மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்

வடகொரியாவை சமாளிக்க மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்

1 mins read

தோக்கியோ: வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். தோக்கியோ வந்துள்ள திரு டில்லர்சன் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கி‌ஷிடா விடம் வடகொரிய விவகாரம் குறித்து பேசியபோது இவ்வாறு கூறினார். ஆசியப் பயணத்தின் முதற் கட்டமாக திரு டில்லர்சன் ஜப்பான் வந்துள்ளார். ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இந்த வாரத்தில் தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் செல்வார்.