சண்டைக்குப் பயந்து தப்பிச் செல்லும் ஈராக்கியர்கள்

சண்டைக்குப் பயந்து தப்பிச் செல்லும் ஈராக்கியர்கள்

1 mins read
dff4d499-77aa-4717-bbcd-2fb69501c4ae
-

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரின் வடக்குப் பகுதி யைக் கைப்பற்ற ஈராக்கியப் படை கடுமையாக சண்டை யிட்டு வருகிறது. சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈராக்கிய மக்கள் அங்கிருந்து தப்பிச் செல் கின்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பலர் தங்கள் குடும்பத்தினருடன் வெளியேறி வருகின்றனர். (படம்) மோசுல் நகரின் பல பகுதிகள் ஈராக்கியப் படையினர் வசம் வந்துவிட்ட போதிலும் அந்நகரம் முழுமையாக அரசாங்கப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. படம்: ராய்ட்டர்ஸ்