பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் நகரில் வியாழக்கிழமை இரவு நடந்த இரு வெவ்வேறு தாக்குதல்களில் பலர் காயமடைந்ததாகத் தகவல்கள் கூறின. பிரான்சின் தெற்குப் பகுதியில் கிராஸே நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அப்பள்ளி முதல்வர் உட்பட 10 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து 16 வயது மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். அந்த மாணவன் அவனது சக மாணவர்கள் மீது கொண்ட வெறுப்பு காரணமாக அத்தகைய செயலில் ஈடுபட்ட தாகத் தெரியவந்துள்ளது என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாரிஸ் நகரில் ஒரே நாளில் நடந்த இரு தாக்குதல்கள்
1 mins read

