வடகொரியாவை உளவு பார்க்கும் ஜப்பானின் செயற்கைக்கோள்

வடகொரியாவை உளவு பார்க்கும் ஜப்பானின் செயற்கைக்கோள்

1 mins read

தோக்கியோ: வடகொரியாவை உளவு பார்க்கும் செயற்கைக் கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளது. வடகொரியா சில நாட்களுக்கு முன்பு நான்கு நவீன ஏவுகணைகளை சோதனை செய்தது. அவற்றுள் மூன்று ஏவுகணைகள் ஜப்பான் நாட்டு கடல் பகுதிக்குள் விழுந்தன. வடகொரியாவின் இந்த செயலை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அதற்கு ஜப்பான் சரியான பதிலடி கொடுக்கும் என்றும் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் ஜப்பான் நேற்று ராக்கெட்டுகளை சோதனை செய்யும் இடத்திலிருந்து அந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சோதனை செய்ததாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.