வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை சாத்தியமே

வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை சாத்தியமே

1 mins read
55b3bbc1-8196-4be4-b25e-2c671da5b8ed
-

சோல்: வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பது சாத்தியமே என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அலெக்ஸ் டில்லர்சன் கூறி யுள்ளார். வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதத் திட்டங்கள் அவசியம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் வட கொரியா அதன் அணுவாயுத் திட்டத்தை கைவிடவில்லை என்றால் அந்நாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியம் உள்ளது," என்று திரு டில்லர்சன் கூறினார். இதுவரை பின்பற்றப்பட்ட பொறுமையான கொள்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் சொன்னார். வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க கடுமையான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அதற்கான எல்லா திட்டங்களும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், தென்கொரிய வெளியுறவு அமைச்சரை சந்திப்பதற்கு முன்னதாக வடகொரிய எல்லையை ஒட்டிய ஒரு கிராமத்திற்கு அருகே அமெரிக்க மற்றும் தென்கொரிய வீரர்களை சந்தித்துப் பேசினார். படம்: ஏஎஃப்பி