பல்வேறு அம்சங்கள் குறித்து டிரம்ப்புடன் மெர்க்கல் பேச்சு

பல்வேறு அம்சங்கள் குறித்து டிரம்ப்புடன் மெர்க்கல் பேச்சு

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்கா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேட்டோ விவகாரம், வர்த்தகம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்ததாக வா‌ஷிங் டன் தகவல்கள் கூறின. திரு ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது திரு டிரம்ப் மற்றும் திருவாட்டி மெர்க்கல்லின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப் பட்டதாக வெளிவந்த தகவல் குறித்தும் அவ்விரு தலைவர் களும் கலந்து பேசினார். இவ்விருவரின் முதல் சந்திப்பு இது. இதற்கு முன்பு ஜெர்மன் பிரதமர் மெர்க்கல்லை திரு டிரம்ப் கடுமையாகக் குறை கூறி வந்தார். இந்த சந்திப்பின்போது நேட்டோ படைக்கு திரு டிரம்ப் தமது வலுவான ஆதரவை தெரிவித்துக்கொண்டார்.