பெருவில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்; வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்

பெருவில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்; வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்

1 mins read
0adf4e5b-c8dc-4e08-b630-fccb1d0e2dc0
-

லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ காரணமாக பெருவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 62 பேர் பலியானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பெருவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் தலைநகர் லிமா போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதாகவும் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டுப் பிரதமர் கூறினார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி களில் வீடுகளை இழந்து தவிக் கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ராணுவ மீட்புக் குழுவால் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உதவிக்காக வீடுகளின் மேற்கூரையின் மீது காத் திருக்கின்றனர்.

பெருவில் கனமழை காரணமாக ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சகதியுடன் கூடிய சேற்றுநீர் தெருக்களில் நிரம்பியுள்ளது. சேற்றுநீரில் சிக்கிக்கொண்ட ஒரு மாதுக்கு இவர்கள் உதவுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்