பாலத்துக்கு ஆங் சான் சூச்சியின் தந்தையார் பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்புப் பேரணி

பாலத்துக்கு ஆங் சான் சூச்சியின் தந்தையார் பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்புப் பேரணி

1 mins read
64da5890-424d-4753-88c9-abb119453134
-

யங்கூன்: கிழக்கு மியன்மாரில் நேற்று ஆயிரக்கணக்கானோர் பேரணியாக நடந்து சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சல்வீன் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு ஆங் சான் சூச்சியின் தந்தையார் பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் பேரணி நடத்தினர். ஆங் சான் சூச்சி அம்மையார், பெரும்பாலான அரசாங்க அதிகாரி கள் சார்ந்த பாமர் இனப் பெரும் பான்மையினர் மீது சிறுபான்மை இனத்தவருக்கு ஏற்பட்டுள்ள நம் பிக்கையின்மையைக் காட்டும் மற்றொரு சம்பவமாக இது கருதப்படுகிறது.

தங்களது பெரும்பாலான விருப்பங்கள் அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று கருதும் சிறுபான்மை இனத்தவர் தன்வின் பாலத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேரணியாகச் சென்றனர். படம்: ஏஎஃப்பி