மலேசியாவில் 'ராஜா போமோ செடுனியா' என்று பிரபலமாகக் குறிப்பிடப்படும் இப்ராகிம் மாட் ஜின், இஸ்லாத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார் என்று போலிசில் புகார்கள் தெரிவிக்கப் பட்டதையடுத்து நேரே முன்னிலை யாகி வாக்குமூலம் கொடுக்கும்படி அவருக்கு போலிஸ் அழைப்பாணை பிறப்பிக்கவிருக்கிறது. குற்றவியல் நடைமுறை விதி தொகுப்பு பிரிவு 111-ன் கீழ் அவருக்கு அழைப்பாணை பிறப் பிக்கப்படும் என்றும் அதற்குக் கீழ் படியவில்லை என்றால் இப்ராகிம் கைதுசெய்யப்படுவார் என்றும் மலேசியாவின் போலிஸ் தலைவர் கலிட் அபுபக்கர் நேற்று தெரி வித்தார்.
ராஜா 'போமோ'வுக்கு மலேசிய போலிஸ் அழைப்பாணை
1 mins read

