'தைவானை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம்'

'தைவானை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம்'

1 mins read

தைப்பே: சீனாவும் அமெரிக்காவும் தைவானை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம் என்று தைவானிய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சீன அதிபர் சி ஜின்பிங்கும் விரைவில் சந்தித்துப் பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் தைவான் இவ்வாறு கூறியுள்ளது. சீனாவின் ஒரு பகுதிதான் தைவான் என்பதை தைவானிய அதிபர் சாய் இங் வென் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவும் சீனாவும் நட்பை மேம்படுத்திக்கொள்ளும் வேளையில் அவற்றின் சொந்த நலனுக்காக தைவானை, சதுரங்க விளையாட்டுக்குப் பயன்படுத்தும் காயாக பயன்படுத்த வேண்டாம் என்று தைவானிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.