மலேசியா: ஐஎஸ் சந்தேக நபர்கள் ஒன்பது பேர் கைது

மலேசியா: ஐஎஸ் சந்தேக நபர்கள் ஒன்பது பேர் கைது

1 mins read

மலேசியாவின் ஐந்து மாநிலங் களில் அதிரடி சோதனை நடத்தி ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப் படும் ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாக போலிஸ் தலைமை இயக்குநர் காலிட் அபுபக்கர் தெரிவித்துள்ளார். பேராக்கில் தாப்பா போலிஸ் நிலையம் மீது நடத்தப்பட இருந்த வெடிகுண்டுத் தாக்குதலை புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பிரிவு முறியடித்துவிட்ட தாகவும் அவர் கூறினார். கைதானவர்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவரும் கால் நடை அங்காடி உரிமையாளர் ஒருவரும் இரு பாதுகாவலர்களும் அடங்குவர். சிலாங்கூர், பேராக், கெடா, கிளந்தான், ஜோகூர் ஆகிய மாநி லங்களில் இம்மாதம் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மேற் கொள்ளப்பட்ட பல்வேறு சோதனை களில் சந்தேக நபர்களைக் கைது செய்ததாக திரு அபுபக்கர் தெரி வித்தார்.