சுகாதார மசோதா தோல்வி; அதிபர் டிரம்ப்புக்கு பேரிடி

சுகாதார மசோதா தோல்வி; அதிபர் டிரம்ப்புக்கு பேரிடி

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டோனல்ட் டிரம்ப், தேர்தலின்போது மக்களுக்கு தான் அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை நிறை வேற்ற முடியாமல் பெரும் பின்ன டைவைச் சந்தித்திருக்கிறார். அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா அமல்படுத்திய 'ஒபாமாகேர்' என்ற சுகாதார கவனிப்புத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒரு சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்தப்போவதாக டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு உறுதி அளித்தார். அதற்கான மசோதாவையும் அவர் அமெரிக்க நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்திருந்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது.