பிலிப்பீன்சில் கடத்தப்பட்ட மூன்று மலேசியர்கள் பத்திரமாக மீட்பு

பிலிப்பீன்சில் கடத்தப்பட்ட மூன்று மலேசியர்கள் பத்திரமாக மீட்பு

1 mins read

மணிலா: பிலிப்பீன்சில் கடந்த எட்டு மாதங்களாக அபு சயாஃப் போராளிகளின் பிடியில் சிக்கி யிருந்த மூன்று மலேசியர்களை பிலிப்பீன்ஸ் ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளதாக சாபா மாநில உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 24 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று மலேசியர்களும் தற்போது பிலிப்பீன்ஸ் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பீன்சில் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் அபு சயாஃப் போராளிகள் அரசாங்கப் படையினருக்கு எதிராக போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதத் தாக்குதல், மற்றும் ஆட்கடத்தல் மூலம் அரசாங்கத்திற்கு தொல்லை கொடுத்து வரும் இந்தக் குழுவினர் வெளிநாட்டினரைக் கடத்திச் சென்று மிரட்டிப் பணம் பறிப்பதை வழக்கத்தில் கொண் டுள்ளனர். பிணைப் பணம் கிடைக்காத நிலையில் பிணையாளிகளின் தலையை துண்டித்துக் கொல் லவும் இக்குழுவினர் தயங்கு வதில்லை. இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு பிலிப்பீன்ஸ் கடல் பகுதி வழியாக சென்ற ஒரு கப்பலை வழிமறித்த இக்குழுவினர் ஐந்து மலேசியர் களைக் கடத்திச் சென்றனர். அவர்களில் இருவர் சென்ற வாரம் விடுவிக்கப்பட்டனர். மீத முள்ள மூன்று பேரை விடுவிக்க பிலிப்பீன்ஸ் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.