பிரான்சில் 35 பேர் கைது

பிரான்சில் 35 பேர் கைது

1 mins read

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரு சீனர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் ஆசிய சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு போலிஸ் நிலையத்திற்கு வெளியே திங்கட்கிழமை இரவு சுமார் 150 பேர் ஒன்றுகூடியதாக போலிசார் கூறினர். அந்த ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலிஸ் அதிகாரிகள் மூவர் காயம் அடைந்ததாகவும் போலிஸ் வாகனம் ஒன்று சேதம் அடைந்ததாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். முன்னதாக பாரிஸில் 56 வயது சீனர் ஒருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கூர்மையான ஆயுதத்தால் போலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகவும் இதனால் அவரை போலிசார் சுட்டுக் கொன்றதாகவும் போலிசார் கூறினர். போலிசார் கூறுவதை அந்த சீனரின் குடும்ப உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.