விடுவிக்கப்பட்ட மலேசியர்களை பிரதமர் நஜிப் சந்தித்தார்

விடுவிக்கப்பட்ட மலேசியர்களை பிரதமர் நஜிப் சந்தித்தார்

1 mins read
3c9af085-74e8-42f6-85ec-de32e38579ab
-

கோலாலம்பூர்: பிலிப்பீன்சில் உள்ள அபு சயாஃப் கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட மூன்று மலேசியர்களை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று சந்தித்துப் பேசினார். சென்ற ஆண்டு அபு சயாஃப் குழுவால் கடத்தப்பட்ட அந்த மூன்று மலேசியர்களும் அண்மை யில் விடுவிக்கப்பட்டனர். அந்த மூன்று பேரும் அவர்களின் குடும்பத்தினருடன் பிரதமர் இல்லத்திற்கு வந்திருந் தனர். அவர்களுடன் திரு நஜிப் அரை மணி நேரத்தை செல விட்டதாக தகவல்கள் கூறின. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐந்து மலேசியர்களை அபு சயாஃப் போராளிகள் கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் கிட்டத்தட்ட 10 மில்லியன் ரிங்கிட் பிணைப்பணம் கேட்டு வந்தனர்.

அபு சயாஃப் குழுவால் கடத்தப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட மூன்று மலேசியர்களை மலேசியப் பிரதமர் நஜிப் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். படம்: ஊடகம்