ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக இந்தோனீசியாவில் ஐவர் கைது

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக இந்தோனீசியாவில் ஐவர் கைது

1 mins read

ஜகார்த்தா: தீவிரவாத இஸ்லாமிய குழு ஒன்றின் தலைவர் முகம்மது காத்தாத் உள்பட ஐந்து பேரை இந்தோனீசியப் போலிசார் கைது செய்துள்ளனர். ஜகார்த்தா ஆளுநர் பசுகி புர்னாமா பதவி விலகக் கோரி தீவிரவாத இஸ்லாமியக் குழுக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த வேளையில் அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலான தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டதாக ஜகார்த்தா போலிஸ் பேச்சாளர் ஆர்கோ யுவோனோ கூறினார். சமய நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை எதிர்கொள்ளும் ஜகார்த்தா ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி இந்தோனீசிய முஸ்லிம்கள் ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகை வரை ஊர்வலமாகச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.