ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவருக்கு 5 நாள் தடுப்புக்காவல்

ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவருக்கு 5 நாள் தடுப்புக்காவல்

1 mins read

கோலாலம்பூர்: ஜோகூர் சுல்தானுக்கு 2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கொடுக்க முயன்றதான குற்றச்சாட்டின் பேரில் வணிகர் ஒருவர் நேற்று புத்ரா ஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக தி ஸ்டார் தகவல் தெரிவித்தது. மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய விசாரணைக்கு உதவ 54 வயதான அந்த வணிகரை ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டார். ஒருவருக்கு 'டான்ஸ்ரீ' பட்டம் கிடைப்பதற்குப் பரிந்துரைக்க ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அந்த வணிகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.