யங்கூன்: மியன்மாரில் நேற்று இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் அரசாங்கம் எதிர் நோக்கும் முதல் சோதனை இது என்று கூறப்படுகிறது. ஐம்பது ஆண்டு கால ராணுவ ஆட்சிக்குப் பிறகு ஆங் சான் சூச்சியின் கட்சி அங்கு நடந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு காலத்தில் ஆங் சான் சூச்சி மக்களுக்கு என்ன செய்தார்? அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நேற்று ஏராளமான மக்கள் வாக்களித்தபோதிலும் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மக்களிடம் காணப்பட்ட உற்சாகம் இந்தத் தேர்தலில் காணப்பட வில்லை. இதனால் ஆளும் கட்சி இந்த முறை அதிக வாக்குகளைப் பெற முடியாது என்று கூறப்படுகிறது.
ஆங் சான் சூச்சியின் அரசாங்கம் எதிர்நோக்கும் முதல் சோதனை
1 mins read

