சிட்னி: கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை டெப்பி எனும் சக்திவாய்ந்த புயல் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங் கள் சேதம் அடைந்துள்ளன. வெள்ளநீரில் அடித்துச் செல்லப் பட்ட இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலிசார் கூறினர். வெள்ள நீரில் சிலர் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் வேளையில் நான்கு பேரை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் அறிவித் துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் நியூ சவுத் வேல்ஸ், குவீன்ஸ்லாந்து ஆகிய இரு மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளநீர் பல வீடுகளை சூழ்ந்துள்ளதால் ஆயிரக் கணக்கான மக்கள் தவிக்க நேர்ந் துள்ளது. மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 100,000 வீடுகள் இருளில் மூழ்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆஸ்திரேலியாவில் வெள்ளம்: இருவர் மரணம், பலர் தவிப்பு
1 mins read
-

