பொகோட்டா: கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக உயர்ந் துள்ளது. கன மழையின் காரணமாக ஆறுகள் கரைபுரண்டு வெள்ளம் ஏற்பட்டதை அடுத்த நிலச்சரிவு ஏற்பட்டது. ஆற்றங்கரையோரமாக வசித்து வந்த மக்கள் பலர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக கொலம்பிய அதிகாரிகள் கூறினர். 200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் உயிருடன் புதையுண்டு இருக் கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் மரண எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப் படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் முழுமூச்சுடன் இறங்கியுள்ளனர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு நடந்து வரும் மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட அந்நாட்டுப் பிரதமர் ஜூவன் மானுவல் சாண்டோஸ், பேரிடர் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பாது காப்பான இடத்திற்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.
நிலச்சரிவில் சிக்கியிருப்போரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

