மாஸ்கோ: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மெட்ரோ சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. அந்த வெடிப்பில் சிறுவர்கள் உள்பட மொத்தம் 20 பேர் காயம் அடைந்ததாகக் கருதப்படுகிறது. சென்னாயா ஃபுளோஷ்சாட் ரயில் நிலையத்திற்கு அருகே எட்டு அம்புலன்ஸ் வண்டிகள் காணப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்தது.
இரு மெட்ரோ ரயில் நிலையங் களை வெடிப்பு உலுக்கியிருப்பது போல் தெரிகிறது என்று மற்றொரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பெலாரஸ் அதிபரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அந் நகர மெட்ரோ சுரங்க ரயில் நிலையத்தை வெடிப்பு உலுக்கி யதாக செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது.

