பேங்காக்: தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோன், புதிய அரசியலமைப்பு சட்டம் குறித்த ஆவணத்தில் நேற்று கையெழுத்திட்டார். தாய்லாந்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடப்பதற்கு இந்தச் சட்டம் வகை செய்கிறது. தாய்லாந்தில் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதல் அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் புதிய அரசியலமைப்பு சட்ட ஆவணத்தில் மன்னர் கையெழுத்திட்டிருப்பது அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டப்படி தாய்லாந்தில் தேர்தல் 2018ஆம் ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசியம் உள்ளது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் ஓ-சான் சா கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு சட்டம்: தாய்லாந்து மன்னர் கையெழுத்திட்டார்
1 mins read

