வடகொரியாவுக்கு பதிலடியாக தென்கொரியா ஏவுகணை சோதனை

வடகொரியாவுக்கு பதிலடியாக தென்கொரியா ஏவுகணை சோதனை

1 mins read

சோல்: தென்கொரியாவை அடிக்கடி அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அடுத்தடுத்து நெடுந் தொலைவு ஏவுகணைகளை சோதனை செய்து வரும் வேளை யில் அதற்கு பதிலடியாக தென் கொரியா நவீன ஏவுகணையை சோதனை செய்துள்ளது. 800 கி.மீ. தொலைவு வரை சென்று வடகொரியாவின் எந்த பகுதியையும் தாக்கக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த நவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்திருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது. வடகொரியா அதன் நவீன ஏவுகணையை ஜப்பானிய கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்த மறுநாள் தென்கொரியா இந்த சோதனையை மேற்கொண் டுள்ளது. ஐநாவின் பொருளியல் தடை மற்றும் உலக நாடுகளின் கண்டனம் ஆகியவற்றை பொருட் படுத்தாமல் வடகொரியா மேற் கொண்டு வரும் ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.