தென் தாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள்

தென் தாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள்

1 mins read

பேங்காக்: தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் தேர்தல் நடத்துவதற்கும் வழிவகுக்கும் புதிய அரசிய லமைப்புச் சட்ட ஆவணத்தில் அந்நாட்டு மன்னர் மகா வஜிரலாங்கோன் கையெழுத் திட்டதை அடுத்துத் தென் தாய்லாந்தில் நேற்று தொடர் தாக்குதல்கள் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப் பட்ட 23 தாக்குதல்களில் குண்டு வெடிப்பு தாக்குதல்களும் அடங்கும். இத்தாக்குதல்களில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று போலிசார் கூறினர். குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பிரிவினைவாதிகள் அல்லது போராளிகள் நடத்திய தாக்குதல்கள் அவை என்று வட்டார பாதுகாப்புப் படை பேச்சாளர் ஒருவர் கூறினார். இத்தாக்குதல்களுக்கு இது வரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இத் தாக்குதல்களுக்குக் காரணமான தீவிரவாதக் குழுவை தங்களால் அடையாளம் காண முடியவில்லை என்று பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.